2.8 மில்லியன் மற்றும் 26 சிம் கார்டுகளுடன் சிக்கிய பெண் கைது

Prabha Praneetha
4 years ago
2.8 மில்லியன் மற்றும் 26 சிம் கார்டுகளுடன் சிக்கிய பெண் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனுக்கு உதவிய பெண் ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய பெண் தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரனான ´மிடிகம நந்துன்´ அல்லது ´ஹரக் கட்டா´ என்பவருக்கே இவ்வாறு உதவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 2020 ஆம் ஆண்டு 5 மாதங்களுக்குள் 720 கிலோ ஹெரோயின், 240 கிலோ ஐஸ் மற்றும் 20 நவீன 9 மி.மீ கைத்துப்பாக்கிகளை வௌிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2.8 மில்லியன் ரூபா பணம் மற்றும் 26 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4