யாழ். கடலில் 6 நாள்களில் இன்று ஐந்தாவது சடலம்! - மக்களிடத்தில் பெரும் அச்சம்

#Death
Prasu
4 years ago
யாழ். கடலில் 6 நாள்களில் இன்று ஐந்தாவது சடலம்! - மக்களிடத்தில் பெரும் அச்சம்

 

யாழ்., வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் இனந்தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியது.

கடந்த ஆறு நாட்களுக்குள் யாழ். குடாநாட்டு கடற்பரப்பில் இனந்தெரியாத ஐந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை பொதுமக்களிடத்தில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு - மணற்காட்டுப் பகுதியிலும் அன்றைய தினம் வடமராட்சி - வல்வெட்டித்துறைப் பகுதியிலும் இரண்டு சடலங்கள் கரையொதுங்கின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுப் பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியது.

அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடமராட்சி - சுப்பர்மடம் கடற்கரையில்  இனம்தெரியாத சடலமொன்று கரையொதுங்கியது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4