வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Vavuniya
Prathees
4 years ago
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வரும் பெண்கள் இரகசிய விபச்சாரத்தில் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் பாலியல் தொற்றின் அபாயம் அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட எயிட்ஸ் தடுப்பு திட்ட உத்தியோகத்தர் டொக்டர் சந்திரகுமார் தெரிவித்தார்.

2003ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வவுனியா மாவட்டத்தில் 29 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேர் ஆண்கள் எனவும்  பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் வவுனியா மாவட்டத்தில் இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், ஏறக்குறைய 10 பாலியல் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்காரணமாகஇ பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், இளைஞர் சமூகம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எய்ட்ஸ் அபாயம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முழு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக டொக்டர் கே.சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4