சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொதுஜன பெரமுன உறுப்பினரைத் தேடி வலைவீச்சு

#Sexual Abuse
Prathees
4 years ago
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொதுஜன பெரமுன உறுப்பினரைத் தேடி வலைவீச்சு

உக்குவெல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பிரதேச சபையின் உறுப்பினர்  சிறுமி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச சபையின் உறுப்பினருக்கு சொந்தமான வீட்டில் சிறுமி தனது பெற்றோருடன் தங்கியிருந்தபோது, ​​வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் வந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு  அளித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4