அசாத் சாலி விடுதலை

#Court Order
Prathees
4 years ago
அசாத் சாலி விடுதலை

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மதக்கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இருந்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை, அசாத் சாலியை கைது செய்வதற்கான முறைப்பாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸாம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4