யாழ்ப்பாண தீவகத்தில் அமைக்கப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை இடைநிறுத்திய சீனா

#China
Prasu
2 years ago
 யாழ்ப்பாண  தீவகத்தில் அமைக்கப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை  இடைநிறுத்திய சீனா

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ  இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுப்பதாகவிருந்ததுடன், இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக இந்தியா தனது அதிதிருப்தியை வெளியிட்டது. அத்தோடு தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்புக் கரிசனை கருதி, இத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆம்...இந்த மாற்றத்துக்கான காரணம், அமெரிக்கா, ஜப்பானின் அழுத்தமாகவும் இருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கிறது.

அத்தோடு இந்தியாவுடன் இலங்கை புதிதாக மேற்கொண்டுவருவதும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் கொழும்பில் நடைபெற்றுவரும் போர்ட் சிற்றி ஒப்ப ந்தத்துக்கும் இதற்க்கும் தொடர்பு இல்லை எனவும், அத்தோடு சீனாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுக்கு இதனால் ஒரு நூல் கூட பாதிப்பு ஏற்படாது எனவும் திட்டவட்டமானா செய்திகள் குறிப்பிடுகிற‌து.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!