மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Prabha Praneetha
4 years ago
மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாத்தறை மாநகர சபை அதிகாரிகள் மற்றும் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரிகளுடன் பாராளுமன்ற குழு அறை 02 இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாத்தறை நகரில் வாழும் மற்றும் நகருக்கு வருகைத்தரும் மக்களுக்கு மிகவும் வசதியான சூழல் மற்றும் நகர்ப்புற வசதிகளுடன் கூடிய பிரதேசத்தை உருவாக்குவதே மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தின் நோக்கமாகும்.

மாத்தறை நகரின் நிர்வாக செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், பொது வைத்தியசாலையை நவீனமயப்படுத்தி வசதிகளை ஏற்படுத்துதல், முறையான வாகன தரிப்பிடத்தை நிர்மாணிப்பது அவசியமானது என சுட்டிக்காட்டிய ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும, நகர மண்டபம் இல்லாத ஒரே மாநகர சபை மாத்தறையாகும்.

புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்தறை மாநகர சபை மற்றும் மாத்தறை பொது வைத்தியசாலையின் உதவி தேவை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4