சிறுமிகளின் முகத்தில் மிளகாய் தூளைத் தடவிய மாமா கைது!

#Police #Abuse
Prathees
4 years ago
சிறுமிகளின் முகத்தில் மிளகாய் தூளைத் தடவிய மாமா கைது!

மொனராகலை மாவட்டத்தில் ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தம்மண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாட்டியின் பராமரிப்பில் இருந்த 13 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுமிகளை  துஸ்பிரயோகம்   செய்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறுமிகளின் தந்தை அவர்களை விட்டு சென்றுவிட்டார். தாயார் கொழும்பு புறநகர் பகுதியில் பணிபுரிந்து வருவதோடு இரண்டு பெண் குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர்.

தாயின் இளைய சகோதரரான குறித்த நபர்  இரண்டு சிறுமிகளையும் அடித்து முகத்தில் மிளகாய்ப்தூளைத்தடவியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுதுடன், வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 வெல்லவாய பொலிஸ் பொறுப்பதிகாரி டி. எம். ரத்நாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4