சிலாபம் வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து!

Prabha Praneetha
4 years ago
சிலாபம் வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து!

ஆனமடுவ - சிலாபம் வீதியில் சங்கட்டிக்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான ராஜகருணா ஹேரத் முதியன்சேலாகே ரன்பண்டார என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வன்னி ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் ஸ்தலத்திலேயே தீப்பற்றி எரிந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4