இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

#SriLanka
Nila
4 years ago
இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், ஆழம் கூடிய மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4