சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகள்

Prabha Praneetha
2 years ago
சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின்  மொத்த விலைகள்

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்…

  • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும்.
  • கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ உலர் மீன் தற்போது, 935 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2020 நவம்பரில் 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டை விட 400 கிராம் பால் பவுடர்கள் 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி விலை 164%, வெண்டைக்காய் 188%, போஞ்சி 70%, கேரட் 70%ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று 1257 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!