ஒமைக்ரோனை எதிர்கொள்ள ஒரே சிறந்த வழி தடுப்பூசியே!

Mayoorikka
2 years ago
ஒமைக்ரோனை எதிர்கொள்ள ஒரே சிறந்த வழி தடுப்பூசியே!

கொரோனா வைரஸின் ஒமைக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க முடியாது. அதை எதிர்கொள்ள சிறந்த ஒரேவழிதடுப்பூசிகளை விரைவாகப் பெற்று எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதே என்று மருத்துவ நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜெயர்வர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்திர, 'புதிய திரிபுக்கு முகங்கொடுப்பதற்கு பூஸ்டர்டோஸைப் பெறுவது மிகவும் இன்றிய மையாதது', என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் மெய்நிகர் வழியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோதே மருத்துவ நிபுணர்கள் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மேலும் பேசிய மருத்துவர் சந்திம ஜீவந்திர, புதிய திரிபுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன்குறித்த தரவு தற்போது கிடைக்கவில்லை. என்றாலும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமான விகிதத்தில் வைத்திருப்பது முக்கியமானது.

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசிகள் உதவின. எனினும், பின்னர் தோன்றிய டெல்டா போன்ற பிற வகைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்தன. எனவே புதிய திரிபுக்கு எதிராகவும் தடுப்பூசிகள்
செயல்படும் என்று நம்புகிறோம் என்றார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகாமாளவிகே, பூஸ்டர் டோஸை சரியாகக் கையாள்வதன் மூலம் உலகின் பிற நாடுகள் புதிய
திரிபை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தடுப்பூசியை விரைவாகப் பெறுவது உங்கள் பொறுப்பு   என்றார்.

இலங்கைக்கு, இதுவரை 3 கோடியே 58 இலட்சம் டோஸ்கள் கிடைத்துள்ளன. இதில் 3 கோடியே 4 இலட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் டோஸ்களைப் பெறுவதற்கு கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. மீதமுள்ளவை வாரந்தோறும் கிடைக்கப்பெறும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். 
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!