ஒமிக்ரோன் திரிபு: இலங்கையில் ஒருவர் அடையாளம்

#Corona Virus
Mayoorikka
4 years ago
ஒமிக்ரோன் திரிபு: இலங்கையில் ஒருவர் அடையாளம்

ஒமிக்ரோன் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ன்ரோ திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஒமிக்ராரோன் கொரோனா திரிபு   இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளது.  29 நாடுகளிலும் இதுவரை மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4