இலங்கை முழுவதும் திடீர் மின் தடைக்கான காரணம் வெளியானது!

#SriLanka
Nila
4 years ago
இலங்கை  முழுவதும்  திடீர் மின்  தடைக்கான காரணம் வெளியானது!

நாடு முழுவதும் திடீர் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று நாட்டில் சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்னோட்டத்து கிடைக்கப் பெறாதமையினால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4