கோட்டாபாய ஆட்சியில் வறுமையில் வாடும் நாட்டு மக்கள்

Nila
2 years ago
கோட்டாபாய ஆட்சியில் வறுமையில்  வாடும் நாட்டு மக்கள்

கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தால் நாடு அபிவிருத்தி அடையும் நாட்டு மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வன்முறைகளின்றி, வாழ்வர் என நினைத்த அரசியல்வாதிகளும், நாட்டு மக்களும் அவருக்கென வாக்குகளை அள்ளிக்குவித்து நாட்டின் ஜனாதிபதியாக்கினர்.

ஏன் உலக நாடுகளும் கோட்டாபயவின் வெற்றியை கொண்டாடியது.

ஆனாலும் அவரின் கெட்ட பலனோ, இல்லை அவருக்கு வாக்குப்போடாத பல லட்சக்கணக்கானோரினதும் எதிர்க்கட்ச்சியினரின் கண்ணீரோ அவர் ஆட்சப்பீடம் ஏறியதும் நாட்டில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஏதும் நல்லதாக நடைபெறவில்லை.

கொடிய கொரோனா பரவல் இலங்கைக்குள்ளும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை காவுகொண்டுவருகின்ற இந்நிலையில், நாட்டின் வருமானமும் குறைந்துபோய் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அந்நியச்செலாவணியை ஏற்படுத்தி வருமானத்தை உயர்த்திக்கொள்ளும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை, ஏற்ற்மதிகள், இறக்குமதிகள் என அனைத்தும் குறைந்துபோக நாடும் வறுமைக்குள் புதைந்துபோய்க்கொண்டிருக்கும் நிலை உருவானது.

இந்நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளோ எதிர்பாராதவிதமாக உயர்ந்தது, சர்வதேச அளவில் இலங்கைக்கான பணவீக்கம் ஏற்பட்டது. கடன்கொடுத்த உலக நாடுகள் தலையில் கைவைக்கும் அளவில் இலங்கையின் நிலமை மோசமாகியது.

அடிக்கடி மின் தடை, நீர்த் தடை என மக்களையே வறுமைக்குள் தள்ளியது. போதிய வருமானம் இன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் அல்லோலகல்லோலப்பட்டு வருகின்ற மக்களை அரசோ, எதிர்க்கட்சியினரோ ஒரு கணம் சிந்தித்ததில்லை.

இது மட்டுமன்றி கோடாபாயவின் அரசில் இயற்கை அழிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் சேதங்களும் எண்ணிலடங்கா என கூறலாம்.

என்னதான் நாடு வறுமைக்குள் தள்ளப்பட்டாலும், ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்குள் அவ்வப்போது சச்சரவுகள் நிலவுவதாகவே அரசியல்வாதிகள் கிசுகிசுக்கின்றனர்.

மஹிந்த ஒரு ஆட்சியையும், கோட்டா ஒரு ஆட்சியையும் நடாத்துவதாகவும் சில கருத்துமுரண்பாடுகளை அவ்வப்போது எதிர்க்கட்சியினர் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

எது என்னவாக இருந்தாலும் மக்களின் வாழ்க்கையிலேயே அடிமேல் அடிவிழுந்த வண்ணமுள்ளன.

நீரின்றி, மின்னின்றி போதிய சாப்பாடின்றி வாழும் மக்கள் இந் நாட்டில் மீளெழுச்சி பெறுவார்களா... நாடு முன்னேற்றம் அடையுமா....

அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தில் இருந்துதான் ஒருவர் தெரிவுச்செய்யப்படுவாரா என எதிர்க்கட்சியினர் கேள்விகேட்கின்றன.....!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!