மின் தடை இலங்கையில் நாளையும் தொடருமா? தடையின் காரணம் வெளியாகியது? (Video)

Nila
2 years ago
மின் தடை இலங்கையில் நாளையும் தொடருமா? தடையின் காரணம் வெளியாகியது? (Video)

ஆம். இலங்கையை ஒட்டுமொத்தமாக முடக்கியிருக்கும் மின் தடை விவகாரம் அரசுக்கு மேலும் பெரிய தலைவலியைக்க் கொடுத்துள்ளது. அதுவும் அதன் காரணம் ஊழியர்களை மையமாக வைத்து என்ற செய்தி உண்மையோ வதந்தியோ இதனால் பாதிக்கப்படுவது அரசே. 

எது எதுவாகவிருந்தாலும் மீண்டும் மின்சாரத் தடை நீங்கி அமைதியான சூழல் எற்பட்டால் மக்கள் சற்று நல்ல காற்றை சுவாசிக்க முடியும்  

இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும்  மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார உற்பத்தி மையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள், கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

எனினும் கட்டமைப்புகளில் சேவையாற்றும் பொறியியலாளர்கள் அட்டவணையின்படி பணியாற்றுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்திருந்தது..
எதற்கும் பொறுத்திரு ந்துதான் பார்க்கவேண்டும்.

2ம் பதிப்பு

நாட்டின் சில பகுதிகளில்  மாத்திரம் மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. எனவும் மற்றய பகுதிகளும் சில மணினேரங்களில் சரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மூன்று மின் விநியோக கட்டமைப்புகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – ஹபரணை, லக்ஷபான – அதுருகிரிய மற்றும் கொத்மலை – பியகம ஆகிய மின் விநியோக கட்டமைப்புகளின் மின்சார விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளாா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!