பாகிஸ்தான் கொலை இலங்கையில் இஸ்லாமியரைத் தாக்குமா? (Video)

Nila
4 years ago
பாகிஸ்தான் கொலை இலங்கையில் இஸ்லாமியரைத் தாக்குமா? (Video)

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் உயிர் அச்சத்தில் மூன்று மத மக்களும் யாரை யார் நம்புவது என தெரியாமல், பய பீதியோடு வாழ்ந்த காலம் போய் தற்போது மதங்களுக்கிடையில் கலவரத்தை ஏற்படுத்தும் சில காரணிகள் வெளினாடுகளில் இரு ந்து வ ந்துகொண்டிருக்கிறது.

ஆம் அவ்வகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மதநிந்தனை குற்றச்சாட்டில் சிறிலங்காவை சேர்ந்த பிரியந்த தியவதன என்ற சிங்கள இலங்கை பிரயாவுரிமையான பிரஜை இன்று கொடுரமாக தாக்கப்பட்டு, பகிரங்கமாக எரித்துக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சநிலை எழுந்துள்ளது.

விளையாட்டு உபகரண தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இவர் மீது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதான குற்றச்சாட்டில் அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் கும்பல் ஒன்று அடித்துக்கொலை செய்துவிட்டு தாக்குதலை நடத்தி அவரது உடலைப் பகிரங்கமாக எரித்த காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் தீவிரமாக பரவிவருகிறது.

மத வன்முறையை கைகளில் எடுத்து அரசியல் செய்யக் காத்திருக்கின்ற கூட்டம் இந்த விடயத்தை இலங்கையில் பெரிதுபடுத்தும் ஆபத்து இருப்பதால், அரசாங்கம் மற்றும் இன மதத் தலைவர்கள் முன்கூட்டியே இந்த விடயத்தில் மிகுந்த கரிசனை எடுக்கவேண்டும் என்று மக்கள் கருதுகின்றார்கள் 

தற்போது சில சிங்கள மத தலைவர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிற்பாடு மைறைவில் எரிந்துகொண்டிருக்கிறது. 
அது முடிவதற்கு முன்னர் ஒரு இஸ்லாமிய நாட்டில் ஏற்ப்பட்ட அசம்பாவிதம், நாட்டில் இரு மதத்துக்குள் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4