சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய மின்சாரம்!

Reha
4 years ago
சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய மின்சாரம்!

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் சுமார் 11.30 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம், சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு நடவடிக்கைகள் ஸ்தம்பிதடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மின்சார விநியோகம் தடைப்பட்டமையினால், நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்ததாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்திருந்தது.

நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டமையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான நிலையில், மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4