முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடித்து சிதறிய அடுப்பு!

Reha
4 years ago
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடித்து சிதறிய அடுப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை  காஸ் அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சமைத்து கொண்டிருந்த போதே இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுப்புக்கு அருகில் யாரும் அச்சந்தர்ப்பத்தில் இருக்காமையால், தெய்வாதீனமாக உயிர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது சம்பவம் இது ஆகும். மேலும் இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4