மேலும் சில நாட்கள் தொடரும் மின்வெட்டு... அரசுக்கும் மக்களுக்கும் பல கோடி ரூபாக்கள் நட்டம்

Keerthi
4 years ago
மேலும் சில நாட்கள் தொடரும் மின்வெட்டு... அரசுக்கும் மக்களுக்கும் பல கோடி ரூபாக்கள் நட்டம்

இன்று நாட்டையும் அதன் செயற்பாடுகளையும் முடக்கிய மின்சார தடை ச‌ற்று தளர்தப்பட்டவேளையிலும் அதன் முழுமையான வினையோகம் சரியாவதற்க்கு மேலும் இரண்டு தொடக்கம் நான்கு நாட்கள் ஆகலாம் என செய்திகள் பரவி வருகிறது.
இவ்வேழையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின்சாரத் தடைகள் ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய  மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகத்தை சரிசெய்ய குறைந்தது 2 நாட்களாவது தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேளையில் மின்வெட்டால் அராசுக்கும் மக்களுக்கும் பல  மில்லியோன் ரூபாக்கள் நட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4