வவுனியா செட்டிகுளம் படுகொலையின் 37 ஆவது நினைவு நாள் டிச‌ம்பர் 2 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது.

Prasu
4 years ago
வவுனியா செட்டிகுளம் படுகொலையின் 37 ஆவது நினைவு நாள்  டிச‌ம்பர் 2 ஆம்  திகதி அனுஸ்டிக்கப்பட்டது.

போர் முடிந்து பல ஆண்டுகளானாலும் போரின்  வடு  பல இடங்களில் பலரது மனதில் இருந்து அகற்றமுடியாத இருளாகா இருக்கிற‌து.

அந்த வகையில், 

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் மரணித்தவர்களின் உறவுகளினால் அவர்களது வீடுகளிலேயே நினைவு கூறப்பட்டப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் இறந்த அம்மக்களை நினைவுகூற வன்னியைச் சேர்ந்த எந்த அரசியல் தலைமைகளும் முன்வராத நிலையில் உறவுகளை இழந்தவர்கள் தத்தமது வீடுகளில் மரணித்த தமது உறவுகளுக்கு தீபமேற்றி நினைவு கூர்ந்தனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நேரம் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமும் அவர்களின் மனக் கவலையில் பகிர்ந்து கொள்வோமாக.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4