கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது

Prasu
4 years ago
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதியில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து நேற்றிரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புதையல் கிடைத்தால் அது அரச சொத்து என்பதால் அரசிடம் ஒப்படைக்கவேண்டுமென இலங்கையில் உள்ள சட்டத்தை இவர்கள் மீறியதே இவர்கள் செய்த குற்றம் என போலீராரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4