பாகிஸ்தானில் இலங்கையார் எரித்துக் கொலை: பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது!

#Pakistan
Prathees
2 years ago
பாகிஸ்தானில் இலங்கையார் எரித்துக் கொலை:  பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது!

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு உபகரணத் தொழிற்சாலை ஒன்றில்  முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் "அவமானத்தின் நாள்" என்று வர்ணித்தார்.

தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வெளிநாட்டவரை கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊழியர்கள் தொழிற்சாலையை சேதப்படுத்தி, போக்குவரத்தை தடுத்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில், தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடிய ஒரு குற்றம் - தூஷித்தல் குற்றச்சாட்டின் பேரில் கும்பல் கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுன்னி முஸ்லீம் குழுவான தெஹ்ரிக்-இ-லபாய்க் பாகிஸ்தான் இயக்கம், இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் செயல்களைக் கையாள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகுதான் வெள்ளிக்கிழமை கொலை நடந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!