இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அபுதாபிக்குச் சென்ற ஜனாதிபதி 

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அபுதாபிக்குச் சென்ற ஜனாதிபதி 

ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியை உள்ளூர் நேரப்படி நேற்று (03) இரவு 10 மணியளவில் சென்றடைந்தார்.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரை அபுதாபிக்கான இலங்கை தூதுவர் மல்ராஜ் டி சில்வா மற்றும் அவரது ஊழியர்கள் வரவேற்றனர்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் கடல் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற நாடுகளுக்கு பொதுவான நலன் மற்றும் அக்கறையுள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாடு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய் தொடர்பான ஐந்தாவது மாநாடு அபுதாபியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4