20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!

Prabha Praneetha
2 years ago
20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக 3 வது தடவையாக (Pfizer) கொவிட்-19 தடுப்பூசியானது 22.11.2021 ஆம் திகதி முதலும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 29.11.2021 ஆம் திகதி முதலும் வழங்கப்பட்டுவருகின்றன.

எனினும் வருந்தத்தக்க வகையில் இவ் மேலதிக தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் மட்டுமே கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் அதன்மூலம் ஏற்படும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2வது தடுப்பூசியைப் பெற்று ஆகக் குறைந்தது ஒரு மாத இடைவெளியின் பின்னரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாத இடைவெளியின் பின்னரும் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!