யாழ். மிருசுவில் பகுதியில் இரயில் - கப் வாகனம் விபத்து. சாரதி பலி!

#SriLanka
யாழ். மிருசுவில் பகுதியில் இரயில் - கப் வாகனம் விபத்து. சாரதி பலி!


நேற்று யாழ். மிருசுவில் பகுதியில் பிற்பகல் குளிரூட்டப்பட்ட தொடருந்துடன் மகேந்திரா கப்  வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மிருசுவிலைச் சேர்ந்த எஸ்.பிரதீப் ( வயது -38 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் . 

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட கடுகதி இரயிலுடனே இந்த கப் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அவ்வேளை பாதை சமிஞை விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்ததாகவும், இதனுடன் தொடர்புபட்ட மேலதீக விசாரணைகள் இடம்பெற்றும் வருகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4