நேற்று மாற்றுதிறனாளிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

#SriLanka #Trincomalee #strike
நேற்று மாற்றுதிறனாளிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

நேற்று திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகள், சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையடுத்து 2014ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தேசிய மாற்றுதிறனாளிகளுக்கான செயற்திட்டத்தினை அமுல்படுத்த வலியுறுத்தி போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

திருகோணமலை 3ம் கட்டை சந்தியில் வெக்கோ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப் பிரிவுககளான பட்டணமும் சூழலும் திருகோணமலை , குச்சவெளி, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பித்து நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் தொழில் உரிமையை பாதுகாப்போம்..மாற்றுது் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவோம்...3 % அரச தொழில் வாய்ப்பை உறுதிசெய்வோம்....அரசே மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டையை வழங்குங்கள்...பொது கட்டிடங்களுக்கான அனுகும் வசதிகளை ஏற்படுத்துங்கள்...சைகை மொழி தெரிந்த அலுவலர்களை சேவைக்கு அமர்த்துங்கள்..மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்துங்கள்...மாற்றுத் திறனுடைய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்..

போன்ற பதாதைகள் ஏந்தியிருந்த மாற்றுத் திறனாளிகள் அப்பதாதைகளில் இவ்வாறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இக் கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம். அதிகமானவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நினைவுக்கு வருவது மார்கழி 03ம் தினத்தில் மாத்திரம்  ஆயினும் 2012ம் ஆண்டு சனத்தொகை மற்றும் குடும்ப கணக்கெடுப்பு விபரத்திற்கு ஏற்ப எமது நாட்டின் சனத்தொகையில் 8.7 வீதம் மாற்றுத் திறனாளிகளே.

அவ்வாறானவர்கள் 1,617,924  பேர் உள்ளனர்.இவர்களில் 55 வீதமானனோர் 19- 55 வயதிற்கு இடைப்பட்டவர்கள் (உழைக்கும் சமூகம்) இதில் உள்ளடங்குகின்றனர். அதேபோன்று எதிர்வரும் காலத்தில் எமதுநாட்டில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உழைக்கும் சமூகம் குறைவடையும். 

அதே போன்று தொற்றா நோய்கள் அதிகரிக்கும் அதாவது மென்மேலும் மாற்றுத் திறனுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இவ்வாறான அனைத்து காரணங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது எமது நாடென்ற வகையில் பாரிய சவால்கள் உள்ளது. எனவே அச் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு மாற்றுத் திறனாளிகளை வலுத்துவது  அணைவரின் பொறுப்பாகும்.

இவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்தி அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு விழிப்புணர்பு எற்படுத்துவோம் என்று

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!