ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை கடத்திய ஆறு பேர் கைது

#Police #Arrest
Prathees
4 years ago
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை கடத்திய ஆறு பேர் கைது

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து ஒன்று நேற்று  வேனில் வந்த சிலரால் சாரதியுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தானை அளுத் ஓயா பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கல் ஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் கடத்தப்பட்ட பேருந்தை சாரதியுடன் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 50 வயதுடைய பிங்கிரிய மற்றும் வீரம்புகெதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஹொரவ்பொத்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4