எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நுகர்வோர் அதிகார சபையினால் அனுமதி!

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நுகர்வோர் அதிகார சபையினால் அனுமதி!

வீட்டுப் பாவனை தவிர்ந்த கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நுகர்வோர் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்கு  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் காஸ்  பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று தெரிவித்திருந்தார்.

ethyl mercaptan வாசனை அளவை 14 ஆக உயர்த்தும் வரை விநியோகத்தை நிறுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4