இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

#SriLanka
Nila
4 years ago
இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில்  கொலை செய்யப்பட்டமைக்கான  காரணம் வெளியானது!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், இலங்கையர் ஒருவரை சித்திரவதை செய்து, கொலைசெய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவமொன்று நேற்று (03) இடம்பெற்றிருந்தது.

இது குறித்து தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிரியந்த குமார தியவதன எனும் இலங்கையரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

சியல்கோட்டிலுள்ள வசிராபாத் வீதியில், தனியார் தொழிற்சாலையொன்றின் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது தொழில் நிமித்தம் சியல்கொட்டில் வசித்து வரும் இவர், இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றிய சுவரொட்டி ஒன்றைக் கிழித்து குப்பைத் தொட்டியில் இட்டதால் அங்கிருந்தவர்கள் கோபமுற்று அவரை தாக்கியுள்ளதோடு, அங்கிருந்து தப்பியோடிய அவரை வீதியில் வைத்து தாக்கிய கும்பல் அவரை வீதியில் வைத்து எரித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதுடன், அந்த வீடியோக்களில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தாக்குவதையும் பின்னர் குறித்த நபரின் உடல் தீயில் எரிவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4