சடுதியாக பேக்கரி நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

Mayoorikka
4 years ago
சடுதியாக பேக்கரி நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பாண் ஒரு ராத்தலின் விலை 60 ரூபாயாகவும், பணிஸ் ஒன்று 20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 நிலையில்   தற்போது மாவின் விலை சடுதியாக அதிகரித்ததன் காரணமாக பாணின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பாண் ஒரு ராத்தல் 75 ரூபாய்க்கும், பணிஸ் 25 ரூபாய் தொடக்கம் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக நுகர்வோர் மிகவும் பாதிக்கப்பட்ட காரணமாக தாம் உற்பத்தி செய்யும் பேக்கரி உற்பத்தி வகைகளை வர்த்தக நிலையங்களுக்கு விற்பனைக்காக கொடுத்து மீண்டும் மறுநாள் அதை திரும்பி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் சில பேக்கரிகள் தற்பொழுது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பேக்கரி உற்பத்திக்கு சலுகை விலையில் கோதுமை மாவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4