காணாமல் போனதாக கூறப்பட்ட  ஜேர்மன் பெண் நீர்கொழும்பில்!

#Police #Negombo
Prathees
4 years ago
காணாமல் போனதாக கூறப்பட்ட  ஜேர்மன் பெண் நீர்கொழும்பில்!

இலங்கை வந்திருந்த ஜேர்மன் பிரஜையான  தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

ஜேர்மனியில் உள்ள அவரது கணவர் அளித்த முறைப்பாட்டின்  பேரில் சிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்காரர்கள் தம்மை அழைத்து பணம் கேட்டதாக ஜேர்மன் நபர் பொலிஸ் முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் தனது மனைவியைப் பற்றிய எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் ஜேர்மன் பெண் கொல்லப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அவர் நீர்கொழும்பு பகுதியில் தானாக முன்வந்து வசித்து வந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த ஜேர்மன் பெண் நீர்கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொச்சிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4