களுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கள்வனை மடக்கிப் பிடித்த மக்கள்.

#Arrest
Prasu
4 years ago
களுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கள்வனை மடக்கிப் பிடித்த மக்கள்.

யாழ்ப்பாணம் டவுணில்  கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருடன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தான் கொண்டு செல்லும் பையில் இரு கத்திகளையும் வைத்து கொண்டு செல்லும் குறித்த நபர், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி திருடி வந்துள்ளார்.

அதேபோல், இன்று (04) காலை யாழ்.மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து, அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடி வருவதைப் பார்த்த திருடன் தப்பியோடியுள்ளார்.

பின்னர் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து திருட முற்பட்டபோது, மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர், எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் உலாவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மக்கள் இச்சூழலில் பெரும் தொற்று மற்றும் பட்டிணியில் அல்லலுறும் வேழையில், இப்படியான சில சம்பவங்களால் அச்சனிலைகொள்ளக்கூடியதாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4