விமான நிலையத்திற்கு  25 கிலோ வெடிபொருட்களுடன் சென்ற வேன்

#Arrest
Prathees
2 years ago
விமான நிலையத்திற்கு  25 கிலோ வெடிபொருட்களுடன் சென்ற வேன்

25 கிலோ பொட்டாசியம் பெர்குளோரைட் வெடிபொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்த வாகன சாரதி  கடந்த 3ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு வடக்கு கதிரான வெபிம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெராட் அன்டனி என்ற சாரதி, கடந்த 3ஆம் திகதி மாலை 06.00 மணியளவில் PB 1461 இலக்கம் கொண்ட வேனில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையவிருந்தார்.

இதன்போது இலங்கை விமானப்படையின் சோதனைச் சாவடிக்கு வந்துள்ளது. சோதனையின் போது வேனில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக சாரதி, வேன் மற்றும் வெடிபொருட்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வேனின் உரிமையாளர் கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் என சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தவறுதலாக வேனில் இருந்து பொட்டாசியம் பெர்குளோரைட் தொகையை இறக்குவதற்கு மறந்துவிட்டதாக சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி சமன் சிகேரா மற்றும் கட்டுநாயக்க பகுதிக்கு பொறுப்பான ஏ.எஸ்.பி எரிக் பெரேரா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜானக சேனாதீர சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!