சுவிற்சர்லாந்தில் இலங்கைப்பெண்ணிற்கு வங்கியொன்றினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

#SriLanka #Switzerland #Women
சுவிற்சர்லாந்தில் இலங்கைப்பெண்ணிற்கு வங்கியொன்றினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் அரச வங்கி நிறுவனமொன்று இலங்கைத்தமிழர் ஒருவரின் தமிழ்ப் பண்பாட்டுக்கலைகளில் ஒன்றுடன் கூடிய படத்தை தமது விளம்பரத்திற்காக பயன்படுத்தி கௌரவப்படுத்தியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள அரச வங்கி நிறுவனம் ஒன்று (Bern Kantonal Bank) அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற தமிழ்க்கலைத் தேர்வில் இசைத்துறையில் ஆற்றுகைத் தேர்வினை நிறைவு செய்த தமிழ் மாணவியும், வளர்ந்து வரும் இளம் இசை ஆசிரியருமான இசைக்கலைமணி சைந்தவி கேதீஸ்வரன் அவர்களுடைய இசைத்துறை சார்ந்த அட்டைப்படத்தினை தங்கள் வங்கியின் இலத்திரனியல் இயந்திரத்திலும் (ATM Cash Machine) விளம்பர செயற்பாடுகளிலும் பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.

செல்வி. சைந்தவி கேதீஸ்வரன் அவர்கள் சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த திரு.திருமதி. கேதீஸ்வரன் வளர்மதி ஆகியோரின் ஏகபுதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் இருந்தே தமிழ்மொழியினையும் இசைத்துறை சார்ந்த தமிழ்க்கலையினையும் முறையாகக் கற்றுவந்த செல்வி. சைந்தவி கேதீஸ்வரன் அவர்கள் பொருளியல் சார்ந்த உயர்கல்வியினையும் கற்று வருவதுடன் மேற்குறிப்பிட்டுள்ள வங்கியில் வாடிக்கையாளர் நிதியியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்கள்.

இலங்கை மண்ணில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்களின் அயராத உழைப்பு காரணமாக அவர்களது பிள்ளைகள் பல துறைகளில் உயர்கல்வியுடன் தமிழ்மொழியினையும், தமிழ்க் கலைகளையும் கற்று பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை பணியாற்றி வருவது மதிப்பிற்குரியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!