திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலை பேருந்து விபத்து! 26 பேர் காயம்!!

#SriLanka #Trincomalee #Bus
திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலை பேருந்து விபத்து! 26 பேர் காயம்!!

திருகோணமலையில் குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளனாது.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம் பெற்றுள்ளது. கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள  தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது பஸ் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.

பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனன்குடா பொலிஸார் இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4