கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

#Colombo
Prathees
4 years ago
கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் நாளை (08) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும்இ போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு ஒரு செய்தியை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவிக்கையில், 

நாளை இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் தங்கள் மின் உற்பத்தி நிலையங்கள்இ அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறி இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு காலை 11 மணிக்கு வருவார்கள்.

பின்னர் நண்பகல் 12 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம் என தெரவித்தார்.

இதேவேளைஇ சம்பள பிரச்சினை தொடர்பில் தபால் ஊழியர்களும் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி வடமேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பல சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4