சுவிஸ் மாப்பிள்ளை திருமணத்தில் மண்ணை தூவிய தரகர்.

#SriLanka #Switzerland
சுவிஸ் மாப்பிள்ளை திருமணத்தில் மண்ணை தூவிய தரகர்.

யாழ். பல்கலைக்கு தெரிவான 21 வயது இளம் பெண்ணை திருமணம் செய்யும் விருப்பத்தில் இருந்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரின் வாழ்வில் மண்ணைத் தூவிய தரகரை ஆள் வைத்து அடித்துள்ளார் என்று தெரியவருகிறது.

இச்சம்பவம் இன்று (07) யாழ்.வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சுவிஸில் வசிக்கும் 32 வயதான யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருந்துள்ளார். இதன்போது புறோக்கர் ஒருவர் இந்த திருமணத்தை நிறுத்தியதால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொட்டனால் தாக்கப்பட்ட நிலையில் புறோக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் முழு விபரம் இதுவரையில் தெரியவரவில்லை.

குறித்த இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4