ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பு!

#Job Vacancy
Mayoorikka
4 years ago
ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பு!

க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஷெஹான் சேமசிங்க இதை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

2015 - 2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன  என அவர் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4