சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிகள் ஐவர் மாயம்: பொலிஸார் வலைவீச்சு

Mayoorikka
4 years ago
சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிகள் ஐவர் மாயம்: பொலிஸார் வலைவீச்சு

சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று  வத்தேகம  மீகம்மன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 சிறுவர்  இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற நிலையிலேயே இச் சிறுமிகள், காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4