பழைய சிலிண்டர்களை திரும்பப் பெற லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு!

#Litro Gas
Mayoorikka
4 years ago
பழைய சிலிண்டர்களை திரும்பப் பெற லிட்ரோ நிறுவனத்திற்கு  உத்தரவு!

பழைய பொலித்தீன் சீல் உள்ள, பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை   உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, தற்போது வீடுகள் மற்றும் விற்பனை முகவர்களிடம் உள்ள பழைய பாதுகாப்பு ​பொலித்தினுடன் கூடிய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்க வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4