பாராளுமன்ற நாகரிகத்தை முறையாகப் பின்பற்றவும் அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை

Reha
4 years ago
பாராளுமன்ற நாகரிகத்தை முறையாகப் பின்பற்றவும் அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை

"பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரிகத்தை முறையாகப் பின்பற்றவும்.” - இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் வைத்து ஆலோசனை வழங்கினார்.

"கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும்போது, ஏனைய எம்.பிக்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசுவதைத்  தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதனைச் சரிவர செய்துள்ளேன்" - என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4