முல்லேரியா படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

#Arrest #Police
Prathees
4 years ago
முல்லேரியா படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

முல்லேரியாவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் 
கெசல்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இவர் வெளிநாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கும்பலுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முல்லேரியா மீகஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் முகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவம்  தொடர்பாக நவம்பர் முதலாம் திகதி கடுவலையில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள்  வேறு தரப்பினருக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொலைக்கு உதவிய சந்தேகநபர்கள் மூவர் நவம்பர் 05ஆம் திகதி பண்டாரகம மற்றும் மொரந்துடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 29, 30 மற்றும் 33 வயதுடைய பண்டாரகம மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய இரண்டு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4