இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கடனாக வழங்கும் இந்தியா!

#SriLanka #India
Nila
4 years ago
இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கடனாக வழங்கும் இந்தியா!

இலங்கைக்கு ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தக் கடன்கள் கிடைக்கப்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வழங்கப்படும்.

மீதமுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எவ்வாறாயினும், இந்த கடன் வசதியை இந்திய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4