இரண்டு வயது குழந்தை உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#Corona Virus #NorthernProvince
Mayoorikka
4 years ago
இரண்டு வயது குழந்தை உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ். போதனா மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்தில் நேற்று 123 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
10 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 4 பேர் (32, 39, 59, 83 வயது பெண்கள்), யாழ். போதனா மருத்துவமனையில் - 02 பேர் (2வயது சிறுமி மற்றும் 28வயது பெண்) வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் 02 பேர் (59 வயது ஆண், 60வயது பெண்) பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர் (27 வயது பெண்) மன்னார் மாவட்ட பொது மருத்துவ மனையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4