வடமத்திய மாகாண ஆளுநராக சர்ச்சைக்குரிய முன்னாள் கடற்படை தளபதி?

Mayoorikka
4 years ago
வடமத்திய மாகாண ஆளுநராக சர்ச்சைக்குரிய முன்னாள் கடற்படை தளபதி?

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கின் தனியார் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே அண்மையில் காலமான நிலையில், அவரது வெற்றிடத்துக்கே முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில்  முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணைகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4