நண்டு பொரியல் பொரிப்பது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருள்கள்:
- நண்டு சதை -1கப்
- வெங்காயம் -2
- காய்ந்த மிளகாய் -3
- கடுகு -1ஸ்பூன்
- பெப்பர் -1ஸ்பூன்
- கருவாயிலை -1கொத்து
- எண்ணை - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் நண்டை உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும். இப்போது ரெடிமெட்டாகவே கிடைக் கிறது
- அப்படி கிடைக்க வில்லை என்றால் முழு நண்டை வாங்கி நாம் சதையை தனியே எடுத்து கொள்ள லாம்.
- சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
- அதில் வெங்காயம், கறிவேப் பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நண்டு சதையினை அதனுடன் சேர்த்து கிளறவும்.
- நன்கு கிளறி உப்பு சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து விட்டு பின் மூடியினை திறந்து கிளறி விட்டு இறக்கவும்.
- கொஞ்சம் காரம் தேவை யென்றால் பெப்பர் தூவி இறக்கவும்.