சர்வதேச பொலிஸாரால் ரெட் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கட்டுநாயக்கவில் கைது.

#SriLanka
சர்வதேச பொலிஸாரால் ரெட் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கட்டுநாயக்கவில் கைது.

இன்று (09) காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்வதேச பொலிஸாரால் ரெட் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கரோலின் அராவியோ டி சில்வா, 23 வயதுடைய பிரேசிலைச் சேர்ந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர

இவரை பிரேசிலுக்கு நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த இவர் விசா காலாவதியானதால் இலங்கை வந்துள்ளார்.

சர்வதேச பொலிஸாருடன் இலங்கைக்கு தொடர்பு இருப்பது தெரியாமலேயே அவர் இலங்கைக்குள் நுழைய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-468 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4