வெளிநாடுகளில் இருந்து டொலர் அனுப்புவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் விடுக்கும் எச்சரிக்கை!

#SriLanka #Central Bank
வெளிநாடுகளில் இருந்து டொலர் அனுப்புவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் விடுக்கும் எச்சரிக்கை!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புவோர் உரிய முறையில் அவற்றை அனுப்ப வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில்  நேற்று (08) நடைபெற்ற  வைபவத்தில் கலந்துக்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து 

தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினார்

டொலர் பிரச்சினை காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியில் அன்றி வெளிநாட்டு பணத்தை நாட்டுக்கு அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மோசடியான வகையில் பணத்தை நாட்டுக்கு அனுப்பிய வைக்கப்படும்  கணக்குகள் தொடர்பில் நாம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான கணக்குகள் சில  தடைசெய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் டொலர்களை ,நடைமுறையில் உள்ள உரிய வழிமுறைகளுக்கு அமைவாக  அனுப்ப வேண்டும் . யுத்த காலத்தில் முறைகேடாக நாட்டுக்கு வந்த பணத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். சட்ட விதிகள் உண்டு.

இப்போதும் இவ்வாறான முறைகேடான விதத்தில் அனுப்பப்படும் டொலர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!