இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவர்

#Police
Prathees
4 years ago
இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவர்

இனந்தெரியாத கும்பல் ஒன்று தம்மை தாக்கியதாக கம்பஹா பிரதேச சபைத் தலைவர் வெலிவேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி இரவு பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகாமையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலின் விளைவாக தனது கழுத்து மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனமு முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் ஜீப்பின் இலக்கம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஜீப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4